திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
"என் நாடு தோற்பதை என்னால் பார்க்க முடியவில்லை" - இந்தியாவின் தோல்வியால் உடைந்து சிதறிய செல்வராகவனின் நெஞ்சம்.!
50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர், 13வது உலகக்கோப்பை சீசனில் இந்தியா, தனது சொந்த மண்ணில் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிராக களம்கண்டு முதல் தோல்வியை சந்தித்தது. இதனால் ஆஸ்திரேலியா 6வது முறையாக உலகக்கோப்பையுடன் தனது நாட்டை நோக்கி பயணிக்கிறது.
எதிர்பாராத பல திருப்பங்களுடன் அமைந்த நேற்றைய போட்டியை நேரில் பார்க்க சென்ற பல கிரிக்கெட் ரசிகர்களும் சோகத்துடன் மைதானத்தை விட்டு பாதியிலேயே புறப்பட்டு சென்றனர். இந்திய அணியின் தோல்வியை பலரும் தங்களின் தோல்வியாக நினைத்து மனக்கருத்தை வெளிப்படுத்தினர்.
இந்நிலையில், இயக்குனர் செல்வராகவன் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், "நேற்று கிரிக்கெட்டில் தோற்றபிறகு அழுதுகொண்டே இருந்தேன். என் குழந்தைகளுக்கு புரியவில்லை. தந்தை அழுது அவர்களால் பார்த்தது இல்லை. பாவம். அது கிரிக்கெட்டில் தோற்றதற்கு வரும் கண்ணீர் அல்ல. என் நாடு தோற்பதை என்னால் பார்க்க முடியவில்லை. அதில் வரும் வலியை சொல்ல இயலாது. நெஞ்சம் உடைந்து சிதறியது" என தெரிவித்துள்ளார்.