மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இசையமைப்பாளர் இளையராஜாவின் குடும்பத்தில் நேர்ந்த திடீர் மரணம்! சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்கள்!
இசையமைப்பாளர் இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராஜன். பாவலர் பிரதர்ஸ் என்ற பெயரில் இயங்கிவந்த இசைக்குழுவில்தான் முதலில் இளையராஜா பணியாற்றி வந்தார். பாவலர் வரதராஜனின் இளையமகன் ஹோமோ ஜோ என்கின்ற பாவலர் மைந்தன். ஜோவிற்கு சினிமா இயக்குனராக வேண்டும் என்பது நீண்டகால ஆசை.
இந்நிலையில் அவர் இயக்குனர் ஆர்.வி.உதயகுமாருடன் இணைந்து சிங்காரவேலன், சின்னகவுண்டர், கிழக்கு வாசல் உள்ளிட்ட பல படங்களில் இணை இயக்குனராகவும், கற்க கசடற படத்தில் வசனகர்த்தாவாகவும் பணியாற்றியுள்ளார்.
இந்நிலையில் அவர் தற்போது நாலு பேரும் ரொம்ப நல்லவங்க என்ற திரைப்படத்தை இயக்கி வந்தார்.இதில் பவர் ஸ்டார் சீனிவாசன், சுரேஷ், யாசின், திருப்பதி உள்ளிட்ட பலரும் நடித்து வந்தனர்.மேலும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைப்பாளராக ஒப்பந்தமாகி இருந்தார். ஆனால் பல பிரச்சினைகளால் இந்த படம் எடுப்பது தடைப்பட்டு கொண்டிருந்தது
இந்த நிலையில் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஜோ, சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து சினிமா பிரபலங்கள் பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.