மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விஜய் சேதுபதி படக்குழு மீது இளையராஜா அதிரடி புகார்.! ஏன்? என்ன நடந்தது.? திரையுலகில் அதிர்ச்சி.!!
தமிழ் சினிமாவில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளிவந்த காக்கா முட்டை என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் மணிகண்டன். இப்படம் தேசிய விருது வென்றது. அதனைத் தொடர்ந்து மணிகண்டன் குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை போன்ற படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில் மீண்டும் அவரது இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் கடைசி விவசாயி.
இந்த படத்தில் நல்லாண்டி என்ற முதியவர் நாயகனாக நடித்துள்ளார். மேலும் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கடைசி விவசாயி படத்திற்கு முதலில் இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார். ஆனால் படக்குழுவிற்கும் இளையராஜாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் அவர்கள் இளையராஜா இசையை நீக்கிவிட்டு சந்தோஷ் நாராயணன் இசையை வைத்து படத்தை முடித்ததாக கூறப்படுகிறது. இப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராகியுள்ளது. மேலும் இதன் டிரெய்லர் அண்மையில் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் அதனைக் கண்ட இளையராஜா படத்தில் தனது இசையை மாற்றியதை அறிந்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவர் தனது அனுமதி பெறாமல் இசையை நீக்கியதுடன், மற்றொரு இசையமைப்பாளரை வைத்து படத்துக்கு இசையமைத்தது தவறு என படக்குழுவினர் மீது இசைக்கலைஞர்கள் சங்கத்தில் இளையராஜா புகார் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.