மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"இளையராஜாவிற்கு தலைக்கனம் அதிகம்" என்று கூறியவர்களுக்கு பதிலடி கொடுத்த இளையராஜா..
தமிழ் சினிமாவில் இசை மாமேதையாக இருப்பவர் இளையராஜா. இவரின் இசையின் வழியாக ரசிகர்களை கட்டி போடும் திறமை இவருக்கு அதிகமாகவே இருக்கிறது என்று கூறினால் மிகையாகாது.
'அன்னக்கிளி' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமானவர். 70 தொடக்கங்களில் இருந்து இசையமைத்துக் கொண்டிருக்கும் இளையராஜா, சமீபத்தில் 'மாடர்ன் லவ் சென்னை' என்ற திரைப்படத்திற்கும் இசையமைத்துள்ளார்.
இளையராஜாவின் இசையை பாராட்டி வரும் பல ரசிகர்கள் அவரின் பேச்சை வெறுத்து வருகின்றனர். அவர் இசையை மட்டும் தான் கேட்க முடியும் அவர் பேச்சை கேட்க முடியாது என்றும், தலைக்கனம் பிடித்தவர் இளையராஜா என்றும் இணையத்தில் நெட்டிசன்கள் பேசி வருகின்றனர்.
இது குறித்து இளையராஜா சமீபத்தில் கலந்து கொண்ட பேட்டியில் காட்டமாக பேசியிருக்கிறார். நான் தலைகனம் கொண்டவனா? இசையமைக்கும் போது நான் இசையுடன் போட்டி போடுவேன். மற்ற எதுவும் எனக்கு தெரியாது. எனக்கு தலைகனம் இருக்கிறது என்றால் அதை கூறியவனுக்கு எவ்வளவு தலைகனம் இருக்க வேண்டும் என்று கோபத்துடன் நேர்காணலில் பேசி இருக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது.