மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடிகை இலியானா தமிழ் படங்களில் நடிக்க தடை விதித்த தயாரிப்பாளர்கள் சங்கம்.!
நடிகர் விஜயுடன் நண்பன் திரைப்படம் மூலமாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான நடிகை இலியானா. இவர் பல ஆண்டுகளுக்கு பின்னர் இஞ்சி இடுப்பழகி என்று தமிழ் ரசிகர்களால் போற்றப்படும் அளவு கவனிக்கப்பட்டார்.
அதற்குப்பின், அவர் பாலிவுட் திரையுலக பக்கம் திரும்பி பல திரைப்படங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில், இவர் பிரபல தயாரிப்பாளர் ஒருவரிடம் நடிப்பதற்கு முன்பணம் வாங்கிவிட்டு அப்படத்தில் நடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த விஷயம் தொடர்பாக தயாரிப்பாளர் நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற தயாரிப்பாளர்கள் சங்கம் அவர் தமிழ் திரைப்படங்களில் நடிக்க தடை விதித்து இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் கிடைக்கவில்லை.