நடிகர் சந்தானத்தின் 80'ஸ் பில்டப் திரைப்படம் அமேசானில் வெளியீடு.!



in-amazon-ott-platform-santhanam-80-s-build-up-movie

 

எஸ். கல்யாண் இயக்கத்தில், ஜிப்ரான் இசையில், கே.இ ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன்ஸ் தயாரிப்பில், கடந்த 24 நவம்பர் 2023 அன்று திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 80ஸ் பில்டப் (80's Buildup). 

நடிகர்கள் சந்தானம், ராதிகா பிரீத்தி, கே.எஸ் ரவிக்குமார், ஆர். சுந்தர்ராஜன், ஆனந்தராஜ், ஆடுகளம் நரேன், முனீஸ்காந்த், ரெடின் கிங்ஸ்லி, மன்சூர் அலிகான், மனோபாலா, மொட்டை இராஜேந்திரன், மயில்சாமி, கூல் சுரேஷ் உட்பட பலரும் நடித்திருந்தனர்.

படம் திரையரங்கில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வசூலை குவித்தது. இந்நிலையில், படம் தற்போது அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது. இப்படத்தை அமேசான் சந்தாதாரர்கள் பார்க்கலாம்.