நடைபாதையில் அமர்ந்தவரை விரட்டித்தள்ளிய மாடு; நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள்.!
சென்னையில் உள்ள மேடவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர், அங்குள்ள சாலையோரம் அமர்ந்து இருந்தார். அச்சமயம், அவருக்கு பின்னால் இருந்து மாடு ஒன்று வந்தது.சாலையோரம் அமர்ந்து இருந்தவரை பார்த்தது திடீரென ஆக்ரோஷமான மாடு, அவரை முட்டித்தள்ளியது. மேலும், ஏறி மிதித்தது.
சென்னை: மேடவாக்கம், சௌமியா நகரில் சாலையோரம் அமர்ந்து இருந்தவரை பின்னால் வந்த மாடு ஒன்று முட்டித் தள்ளியது. இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் மாட்டை விரட்டியடித்தனர். தொடர்ந்து, படுகாயம் அடைந்தவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள்… pic.twitter.com/fSApaCWYdx
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) November 18, 2024
இதையும் படிங்க: பெண்களே கவனம்.! அகல்விளக்கு தீ சேலையில் பரவி பரிதாபம்; தொழிலதிபரின் மனைவி போராடி பலி.!
பதறவைக்கும் காட்சிகள்
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், விரைந்து சென்று மாட்டை அங்கிருந்து விரட்டியடித்தனர். மாடு தாக்குதலில் படுகாயமடைந்தவர், உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டார். இந்த விஷயம் தொடர்பான பதறவைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: மக்களே ரெடியா? சென்னையில் இன்று இங்கெல்லாம் மின்தடை அறிவிப்பு.!