#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கிரிக்கெட் வீரர் பும்ராவுடன் காதலா? பிரபல தமிழ் நடிகை விளக்கம்.!
அனுபமா பரமேஸ்வரன் கேரளாவை பூர்வேகமாக கொண்டவர். இவர் மலையாளத்தில் பிரேமம் திரைப்படத்தில் நடித்து கேரள மக்கள் மற்றும் தமிழ் மக்களின் ஆதரவை பெற்றவர். பிரேமம் படம் மூலம் புகழின் உச்சிக்கு சென்ற மூன்று கதாநாயகிகளில் ஒருவரான அனுபமா கொடி திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார்.
மற்ற இரண்டு நடிகைகளும் தமிழ், மலையாளம் ஆகியவற்றில் தற்போது கவனம் செலுத்தி நடித்து வருகின்றனர். ஆனால் அனுபமா பரமேஸ்வரன் தமிழில் கொடி படத்தில் மட்டுமே நடித்தார். தொடர்ந்து கடந்த இரண்டு வருடங்களாக தெலுங்கு திரையுலகிலேயே நிரந்தரமாக தங்கிவிட்டார்.
இந்நிலையில், தற்சமயம் உலகக் கோப்பை போட்டி தொடரில் விளையாடும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவை அனுபமா காதலிப்பதாக செய்திகள் வெளிவந்தன. இதுகுறித்து அனுபமாவே கூறும்போது: சமூக வலைத்தளங்கள் மூலம் அவருடன் பழகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஆனால் அது காதல் இல்லை; பும்ரா ஒரு நல்ல நண்பர் என்று விளக்கம் கொடுத்துள்ளார்.