மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
66-வது கிராமி விருதுகள்.. "இந்தியாவிற்கு விருதை வென்று தந்த 'THIS MOMENT' பாடல்.."
66 ஆவது பிராமி இசை விருதுகள் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது.. இசைக் கலைஞர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான இந்த நிகழ்வில் இசை, ராக், பாப் நடனம், என பல பிரிவுகளில் விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டிற்கான கிராமி விருது இந்திய இசைக்குழுவுக்கு கிட்டியுள்ளது. ஷக்தி என்ற இசை குழு உருவாக்கிய 'THIS MOMENT' என்ற பாடலுக்கு கிராமிய விருது வழங்கப்பட்டுள்ளது
இந்தியாவின் புகழ்பெற்ற இசைக் கலைஞர்களான சங்கர்மகாதேவன், விநாயக்ராம் செல்வகணேஷ், கணேஷ் ராஜகோபாலன், உஸ்தாத் ஜாகீர் உசேன் ஆகியோரை கொண்ட இந்த இசைக்குழுவின் 'THIS MOMENT ' என்ற இந்தப் பாடல் இந்தியாவிற்கு கிராமி விருதை பெற்று தந்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் விருது வென்ற பெண் பேசிய பாடகர் மற்றும் இசையமைப்பாளர் சங்கர் மகாதேவன் இந்திய மக்களுக்கும் கடவுளுக்கும் நன்றியை தெரிவித்திருக்கிறார். மேலும் இந்த வெற்றியை தனது மனைவிக்கு சமர்ப்பித்துள்ளார்.