மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இந்தியன் 2 படத்தில் சிம்புவுக்கு பதில் நடிக்கப்போகும் பிரபலம் இவர் தான்.!
சம்பள விவகாரம் தொடர்பாக எழுந்த பஞ்சாயத்தின் காரணமாக இந்தியன்2 படத்தில் இருந்து சிம்புவை அதிரடியாக நீக்கியுள்ளது லைக்கா நிறுவனம்.
தமிழ் சினிமாவில் கமல்ஹாசன் நடிப்பில் பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி வெற்றிகரமாக ஓடிய திரைப்படம் இந்தியன். இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது.
Director @shankarshanmugh to shoot in Taiwan for @ikamalhaasan's #Indian2https://t.co/lGkV8PoXyw pic.twitter.com/Sw88R1NIdy
— Chennai Times (@ChennaiTimesTOI) January 10, 2019
இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிப்பில், ஷங்கர் இயக்குகிறார். இந்த படத்தில் கமல்ஹாசன் முதியவராகவும், இளமை தோற்றத்திலும் இரு வேடங்களில் நடிக்கிறார். இப்படத்தில் முக்கிய வேடத்தில் சிம்பு நடிப்பதாக செய்தி வெளியாகியது. குறிப்பாக கமலுக்கு பேரனாக சிம்பு நடிப்பதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில், லைகா தயாரிப்பில் உருவாகியுள்ள வந்தா ராஜாவாத்தான் வருவேன் படத்துக்கு சிம்பு சரியான ஒத்துழைப்பு தரவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக இயக்குனர் ஷங்கரிடம் சிம்பு இப்படத்தில் நடிக்க வேண்டாம் என்று லைகா நிறுவனம் கூறியதாகவும், அதற்கு ஷங்கர் யோசிக்காமல் ஓகே சொன்னதாகவும் கூறப்படுகிறது.
சிம்புவிற்குப் பதிலாக அந்த வேடத்தில் சித்தார்த் நடிக்க இருப்பதாகவும் படக்குழுவினர் சித்தார்த்தை ஒப்பந்தம் செய்து விட்டதாகவும் கூறப்படுகிறது.