மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சர்வைவர் ஷோவால் பிகில் பாண்டியம்மாவிற்கு இப்படியொரு பரிதாப நிலையா! பேரதிர்ச்சியடைந்த நெட்டிசன்கள்!!
விஜய் தொலைக்காட்சியில் காமெடி ஷோக்களில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமாகி, தற்போது ஏராளமான திரைப்படங்களில் நகைச்சுவை நாயகனாக நடித்து வருபவர் ரோபோ சங்கர். இவரது மகள் இந்திரஜா. இவர் விஜய் நடிப்பில் வெளிவந்து செம ஹிட்டான பிகில் திரைப்படத்தில் பாண்டியம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பெருமளவில் பிரபலமானவர்.
அதனைத் தொடர்ந்து இந்திரஜா அண்மையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சர்வைவர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். அங்கு ஒரு வாரம் மட்டுமே ஷோவில் இருந்த அவர் எலிமினேட் ஆகி மூன்றாம் உலகம் என்ற தீவில் தனிமையில் விடப்பட்டார். அங்கு அவர் காயத்ரியுடன் இருந்தார். பின்னர் ஒரு வாரத்திற்குப் பிறகு அங்கு நடந்த போட்டியிலும் தோல்வியடைந்து நிரந்தரமாக எலிமினேட் ஆனார்.
இந்நிலையில் இந்துஜா தற்போது காலில் பெரிய காயத்துடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர், சர்வைவர் எளிமையானது கிடையாது. அங்கு எனக்கு பல காயங்கள் ஏற்பட்டது. அவற்றிலிருந்து மீள்வதும் பெரிய டாஸ்க் தான். எனக்கு காலில் மிகவும் மோசமான சுளுக்கு ஏற்பட்டுள்ளது. அது கடைசி நிலையில் உள்ளது. இன்னும் அடிபட்டு இருந்தால் எலும்பு முறிவு ஏற்பட்டு இருக்கும்.
நல்லவேளை நான் வெளியே வந்து மருத்துவரை பார்த்து விட்டேன். என்னை இரண்டு வாரம் ஓய்வு எடுக்க கூறியுள்ளனர். இதுவும் ஒரு பாடம் தான். கஷ்டங்கள் இல்லாமல் வெற்றி இல்லை. இதுவும் ஒரு சுகமான வலிதான் என்று பதிவிட்டுள்ளார்.