#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
எந்த விதிமீறலும் இல்லை.! விக்னேஷ் சிவன்- நயன்தாரா இரட்டை குழந்தைகள் விவகாரம்! வெளிவந்த விசாரணை அறிக்கை!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் 7 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஜூன் 9ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு திருமணமாகி நான்கு மாதத்திலேயே தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்ததாக விக்னேஷ் சிவன் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார்.
மேலும் குழந்தை வாடகைத் தாய் மூலம் பிறந்ததாக தகவல்கள் வெளிவரவே பெரும் பரபரப்பு கிளம்பியது. இதுகுறித்து விசாரணையும் நடைபெற்றுள்ளது. அதனை தொடர்ந்து சுகாதாரத்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் தனியார் மருத்துவமனையில் செயற்கை கருத்தரிப்பு தொழில்நுட்பம் மற்றும் வாடகைத்தாய் மூலமாக குழந்தை பெற்றுக்கொண்டது தெரிய வந்துள்ளது. ஐசிஎம்ஆர்-ன் வழிகாட்டுதலை பின்பற்றி நயன்தாரா- விக்னேஷ் சிவன் இரட்டை குழந்தைகளை பெற்றுள்ளனர்.
வாடகைத்தாய் உரிய தகுதியான வயதில் உள்ளார். அவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. மேலும், நயன்தாரா விக்னேஷ் சிவனிற்கு பதிவு திருமணம் 11.03.2016ல் நடைபெற்றதாக பதிவு சான்றிதழ் மருத்துவமனை சார்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அந்த சான்றிதழின் உண்மைத்தன்மை உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், கடந்த ஆகஸ்ட் 2020 சினைமுட்டை மற்றும் விந்தனு பெறப்பட்டு கருமுட்டைகள் உருவாக்கப்பட்டு மருத்துவமனையில் உறை நிலையில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. நவம்பர் 2021ல் வாடகைத்தாய் ஒப்பந்தம் போடப்பட்டு மார்ச் 2022-ல் கருமுட்டைகள் வாடகைத்தாயின் கருப்பையில் செலுத்தப்பட்டு குழந்தைகள் அக்டோபர் மாதம் பிரசவிக்கப்பட்டுள்ளது. அந்த குழந்தைகள் 09.10.2022 அன்று நயன்தாரா விக்னேஷ் சிவனிடம் வழங்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.