மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தளபதியின் லியோ படத்தில் இணைந்த பிக்பாஸ் சர்ச்சை நடிகை.!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜயின் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் லியோ. சில நாட்களுக்கு முன்பு திரைப்படத்தின் டைட்டில் லுக் மற்றும் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது.
இத்திரைப்படத்தில் விஜய்யுடன் திரிஷா, அர்ஜுன், மன்சூர் அலிகான், பாலிவுட் நடிகர் சஞ்சய்தத், டைரக்டர் கௌதம் மேனன் மற்றும் மிஸ்கின் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகின்றன. அங்கிருக்கும் கடுமையான குளிரையும் பொருட்படுத்தாமல் படப்பிடிப்பு குழுவினர் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.
இத்திரைப்படத்தினை பற்றிய தினம் ஒரு அப்டேட்டுகள் வந்து தளபதி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பன்மடங்கு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில், இத்திரைப்படத்தில் அஜித் பட நடிகை இணைந்து இருப்பதாக செய்திகள் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்து இருக்கிறது.
அந்த செய்திகளின்படி பிக் பாஸ் சீசன் மூன்றில் கலந்துகொண்டு ரசிகர்களிடம் புகழ்பெற்றவர் நடிகை அபிராமி. இவர் தல அஜித் குமார் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது இவரும் லியோ பட குழுவில் இணைந்திருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
மேலும் சமூக வலைதளங்களில் இந்த செய்தி உண்மை என நிரூபிக்கும் வகையில் நடிகை அபிராமி இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகியிருக்கிறது. இதனால் அபிராமி லியோ படத்தில் நடிக்கயிருப்பது உறுதியாகியுள்ளது.