மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தளபதி விஜய்க்கு வில்லனாகிறாரா அமீர்கான்.? ... கோலிவுடில் வெளியான பரபரப்பு தகவல்.!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தளபதி விஜய். இவர் லியோ திரைப்படத்தின் படப்பிடிப்புகளை முடித்துவிட்டு தற்போது தளபதி 68 திரைப்படத்திற்காக தயாராகிக் கொண்டிருக்கிறார். இந்தத் திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்க ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது
சமீப காலமாகவே தமிழ் சினிமாவில் பாலிவுட் முன்னணி நடிகர்கள் வில்லனாக நடித்து வருவது தொடர்கிறது. அக்ஷய் குமார், அனுராக் காஷ்யப், ஜாக்கி ஷெராஃப், விவேக் ஓபராய் மற்றும் நவாசுதீன் சித்திக் போன்றோர் வில்லன்களாக தமிழ் திரைப்படங்களில் நடித்திருக்கின்றனர்.
இந்நிலையில் பாலிவுட் ஸ்டார் ஹீரோவான அமீர்கான் தளபதி விஜயின் திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தளபதி 68 திரைப்படத்தை தயாரிக்கும் ஏஜிஎஸ் நிறுவனத்தின் முன்னணி நிர்வாகி ஒருவர் அமீர் கானை சந்தித்து பேசி இருப்பதாக அந்த தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதே ஏஜிஎஸ் நிறுவனம் தான் ஜெயம் ரவி நடிக்கும் தனி ஒருவன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தையும் தயாரிக்கிறது. இதனால் அமீர்கான் தனி ஒருவன் இரண்டாம் பாகம் அல்லது தளபதி 68 திரைப்படத்தில் வில்லனாக ஒப்பந்தம் செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு கோலிவுட் வட்டாரங்களில் நிலவி வருகிறது. எனினும் தளபதி 68 திரைப்படத்தில் அவர் வில்லனாக நடிப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கோலிவுட்லிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.