மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
'Dangal' பட நாயகியை மணக்க இருக்கிறாரா அமீர் கான்.? பாலிவுட் சூப்பர் ஸ்டாரின் 3வது திருமணம் பற்றிய செய்தி.!
தமிழ் சினிமாவில் உலக நாயகன் கமல்ஹாசன் போல பாலிவுட் சினிமாவில் நடிகர் அமீர்கான். தான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரமாகவே மாறுவதற்காக தன் உடலையே வருத்தி நடிக்கும் நடிகர். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான லால் சிங் சத்தா என்ற திரைப்படம் படுதோல்வி அடைந்தது.
ஏற்கனவே இரண்டு முறை திருமணமானவரான அமீர்கான் ரீனா தத்தா மற்றும் கிரண் ராவ் ஆகிய இருவரையும் விவாகரத்து செய்து விட்டார். இந்நிலையில் அவர் மூன்றாவது திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல்கள் பாலிவுட் வட்டாரங்களில் பரவி வருகிறது.
பிரபல ரியாலிட்டி ஷோக்கலில் பங்கு பெற்று வருபவரும் பாலிவுட்டின் சர்ச்சை நடிகை ராக்கி சாவந்த் அமீர் கானை திருமணம் செய்து கொள்ளப் போவதாக கூறி வந்த நிலையில் அமீர்கான் மூன்றாவதாக யாரை திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.
தங்கள் படத்தில் நடித்த 31 வயது நடிகையான பாத்திமா சனா ஷேக் என்பவரை தான் அமீர்கான் திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. மேலும் இருவரும் ஒன்றாக சுற்றிவரும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அமீர்கான் 58 வயது நெருங்கிக் கொண்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.