திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கர்ப்பமாக இருக்கும் தீபிகா படுகோனே.! காதல் கணவர் ரன்வீருடன் விவாகரத்தா?? ஷாக்கில் ரசிகர்கள்!!
பாலிவுட் சினிமாவில் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நட்சத்திரங்களாக வலம் வருபவர்கள் தீபிகா படுகோனே மற்றும் ரன்வீர் சிங். தீபிகா தமிழில் ரஜினி நடிப்பில் வெளிவந்த கோச்சடையான் படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் அவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
தீபிகா படுகோனே கர்ப்பம்
மேலும் பல ஆண்டுகளுக்குப் பிறகு சமீபத்தில் நடிகை தீபிகா படுகோனே கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் பரவியது. அவர்கள் தாங்கள் செப்டம்பர் மாதத்தில் தங்களது குழந்தையை எதிர்பார்த்து காத்திருப்பதாக மகிழ்ச்சியுடன் அறிவித்திருந்தனர். இந்த நிலையில் தற்போது திடீரென ரன்வீர் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து திருமண புகைப்படங்கள் அனைத்தையும் நீக்கியுள்ளார்.
காதல் ஜோடி விவாகரத்தா??
உடனே ரன்வீர் மற்றும் தீபிகா படுகோனே இருவரும் விவாகரத்து செய்யது பிரிய உள்ளனரா என பலரும் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பினர். இந்நிலையில் ரன்வீர் சிங்கும் தீபிகா படுகோனேவும் சுற்றுலாவில் மகிழ்ச்சியாக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் கர்ப்பமாக இருக்கும் நடிகை தீபிகா படுகோனேவை ரன்வீர் சிங் கையை பிடித்தபடி செல்லும் புதிய புகைப்படம் ஒன்றும் வெளியாகி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.