மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
2-வது திருமணம் செய்து கொள்கிறார் சமந்தா.?.. பெற்றோர் வற்புறுத்தலால் திடீர் முடிவா.? முழு விவரம்.!
தென்னிந்திய திரையுலகில் பிரபல நடிகையாக இருக்கும் சமந்தா விரைவில் இரண்டாவது திருமண வாழ்க்கையில் இணைய உள்ளதாக தகவல்கள் பரவி வைரலாகி வருகிறது.
தமிழில் விண்ணைத்தாண்டி வருவாயா படம் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் சமந்தா. பானா காத்தாடி, மாஸ்கோவின் காவிரி, நீதானே என் பொன்வசந்தம், உள்ளிட்ட படங்களில் தனது ஆரம்ப கால சினிமா வாழ்க்கையின் போது நடித்திருந்தார். அதன் பிறகு, வின்னைத்தாண்டி வருவாயா படத்தில் தெலுங்கு ரீ-மேக்கில் கதாநாயகியாக நடித்தார். இப்படம் உள்பட இவர் நடித்த பிற படங்களும் வெற்றி பெற, தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்து வந்தார்.
நடிகை சமந்தா, கிட்டத்தட்ட 14 வருடங்களாக திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தமிழில் விஜய், சூர்யா, விக்ரம் என முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்த இவர் தெலுங்கிலும் நாக சைதன்யா, விஜய் தேவரகொண்டா, அல்லு அர்ஜுன் உள்ளிட்டோருக்கு நாயகியாக நடித்தார். இப்படி நன்றாக போய்க்கொண்டிருந்த சமந்தாவின் சினிமா வாழ்க்கை கடந்த சில ஆண்டுகளாக சரிவை சந்தித்து வருகிறது.
விவாகரத்தில் முடிந்த காதல் திருமணம்: நடிகை சமந்தா, கடந்த 2017ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். பல படங்களில் ஒன்றாக சேர்ந்து நடித்திருந்த இவர்கள், ஆரம்பத்தில் நல்ல நண்பர்களாக இருந்தனர். இடையிடையே வெவ்வேறு ஆட்களுடன் ரிலேஷன்ஷிப்பிலும் இருந்தனர். அதன் பிறகு இவர்கள் இருவரும் காதல் வயப்பட அது திருமணத்திலும் முடிந்தது. இந்நிலையில் இவர்களின் திருமண வாழ்க்கையிலும் புயல் வீசத்தொடங்கியது. இறுதியில் இருவரும் ஒன்றாக முடிவு செய்து 2021-ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
2வது திருமணம்: சமந்தாவும் நாக சைதன்யாவும் பிரிந்து விட்டாலும் தங்களது சினிமா வாழ்க்கையில் பிசியாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில், தற்போது சமந்தாவிற்கு இரண்டாவது திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. வீட்டில் பெரியவர்கள் பார்த்து சமந்தாவிற்கு தூரத்து உறவினர் ஒருவரை பேசி முடித்திருப்பதாகவும் அவருடன் சமந்தாவிற்கு விரைவில் திருமண பேச்சு வார்த்தை தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.