#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பாலிவுட் நடிகருடன் தமன்னாவின் ரொமான்டிக் டின்னர் டேட்.! வைரல் வீடியோ.!
கேடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தமன்னா. அதனைத் தொடர்ந்து சுறா, ஆனந்த தாண்டவம், பையா, அயன், சிறுத்தை போன்ற பல படங்களில் நடித்தவர். சிறிது காலம் தமிழ் சினிமாவிலிருந்து விலகியிருந்த இவர் சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர் திரைப்படத்தின் மூலம் மீண்டும் 'கம் பேக்' கொடுத்து இருக்கிறார்.
தற்போது 33 வயதான தமன்னாவிற்கே இதுவரை திருமணம் ஆகவில்லை. பல நடிகர்களுடன் அவர் தொடர்ந்து கிசுகிசுக்கப்பட்டு வந்தாலும் எல்லா வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்தவர். தனது நடிப்பு மற்றும் விளம்பர படங்கள் என கேரியரில் கவனம் செலுத்தி வந்தார்.
இந்நிலையில் தமன்னா பாலிவுட் நடிகர் ஒருவரை காதலித்து வருவதாகவும் அவருடன் டேட்டிங் சென்று வருவதாகவும் தகவல்கள் வெளியான. இதனை உண்மை என்று நிரூபிக்கும் வகையில் சமீபத்தில் இருவரும் டின்னர் டேட் சென்று இருக்கின்றனர். அது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பாலிவுட் நடிகரான விஜய் வர்மா என்பவரை தான் தமன்னா காதலித்து வருவதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இருவரும் தங்களது டின்னர் டேட்டின் போது முத்தங்களை பரிமாறிக் கொண்டாலும் அவர்கள் காதலை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. அவர்கள் இருவரும் இருக்கும் வீடியோவை ரசிகர்கள் வைரல் செய்து வருகின்றனர்.