திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
தமிழக வாக்காளர் கணக்கெடுப்பில் இறங்கிய விஜய்.! ரசிகர் மன்றத்துக்கு பறந்த உத்தரவு.!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் தளபதி விஜய். சூப்பர் ஸ்டாருக்கு அடுத்தபடியாக அதிகமாக ரசிகர்களைக் கொண்டவர் இவர். தற்போது விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
சில வருடங்களுக்கு முன்பாகவே தன்னுடைய ரசிகர் மன்றங்களை மக்கள் இயக்கமாக மாற்றி அதன் மூலம் மக்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகளை செய்து வந்தார். நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலிலும் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக அவரது ரசிகர்கள் தேர்தலில் போட்டியிட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட வாரியாக உள்ள அம்பேத்கர் சிலைகளுக்கு விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது தளபதி விஜய் விரைவில் அரசியலில் இறங்குவார் என்று கருத்துக்கள் நிலவி வந்தன.
தற்போது மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு மாவட்டந்தோறும் உள்ள வாக்காளர் விவரங்களை சேகரிக்கும்படி உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதனைத் தொடர்ந்து விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் வாக்காளர்களின் விவரங்களை சேகரித்து வருகின்றனர். இவற்றையெல்லாம் வைத்து பார்க்கும் போது விஜய் வருகின்ற சட்டசபை தேர்தலில் களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் அரசியலில் இறங்கினால் நிச்சயமாக தமிழக அரசியலில் ஒரு பெரிய மாற்றம் உருவாகும் என்று அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.