மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அவர் சொன்னத அப்பவே கேட்டிருக்கணும்.! கஞ்சா கருப்பு வேதனை.!
தமிழ் சினிமாவில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர்தான் நடிகர் கஞ்சா கருப்பு பாலாவின் பிதாமகன் என்ற திரைப்படத்தின் மூலமாக திரைத்துறைக்கு அறிமுகமான இவர் சிவப்பதிகாரம் சண்டக்கோழி சிவகாசி போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே மேலும் பிரபலமானார்.
பின்னர் 2014 ஆம் வருடம் மகேஷ் ரகசியா உள்ளிட்டோரின் நடிப்பில் உருவான வேல்முருகன் போர்வெல்ஸ் என்ற திரைப்படத்தை தயார் செய்தார் ஆனால் அந்த திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய நஷ்டத்தை உண்டாக்கியது.
இது தொடர்பாக பேசியுள்ள அவர்,இயக்குநர் பாலா "உனக்கு தயாரிப்பு பற்றி என்ன தெரியும்? எதற்காக நீ தயாரித்து இவ்வளவு பணத்தை இழந்தாய்? நீ ஒரு நல்ல நடிகன்! அந்த பாதையில் செல் என்று அறிவுரை கூறியதை நான் கேட்கவில்லை.
அதை கேட்டு நான் மனமாற்றம் அடைவதற்கு முன்பு எனக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டது. இப்பொழுது என் சொந்த வீட்டை விட்டு வாடகை வீட்டில் இருக்கிறேன். பிள்ளைகளின் படிப்பு செலவுக்கு சிரமப்படுகிறேன்.
அந்த ஒரே ஒரு படத்தினால் நான் என் குடும்பத்தில் ஐந்து உயிர்களை இழந்து உள்ளேன்" என கூறியிருக்கிறார்.