#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
என்னது! ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணி இந்த நடிகைதானா! கொள்ளை அழகில் இளம் நடிகைகளையே மிஞ்சிடுவார் போல!
தமிழ் சினிமாவில் பிரபலமாக இருக்கும் நடிகைகளில் ஒருவர் ஐஸ்வர்யா ராஜேஷ். கவர்ச்சி, ஆட்டம் என பெரியளவில் எதுவுமின்றி தனது திறமையால் மட்டுமே எத்தகைய கதாபாத்திரத்திலும் இயல்பாக நடித்து தற்போது முன்னணி நடிகையாக கொடி கட்டி பறக்கிறார். இவருக்கு என ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
2012 ஆம் ஆண்டு ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் அட்டகத்தி. இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதைப்போலவே மற்றொரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை சோபியா. இவர் ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணி ஆவார்.
ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரர் மணிகண்டன். அவர் வள்ளி, கேளடி கண்மணி, அழகு போன்ற சீரியல்களில் நடித்துள்ளார். அவரது மனைவிதான் சோபியா. நடிகையான அவர் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த ‘லட்சுமி’ படத்திலும் நடன ஆசிரியராக நடித்துள்ளார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார் இந்த நிலையில் சமூக வலைதளங்களில் பிசியாக இருக்கும் சோபியா ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு டப் கொடுக்கும் வகையில் வித்தியாசமான போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அது வைரலாகி வருகிறது.