#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியதை கேட்டு அதிர்ச்சியான ரசிகர்கள்! என்ன சொன்னார் தெரியுமா?
தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகைகளில் ஒருவர் ஐஸ்வர்யா ராஜேஷ். ஆடல், பாடல், கவர்ச்சி என்று மட்டும் இல்லாமல் கதைக்கு முக்கியத்துவம் தரும் படங்களை தேர்வு செய்து நடித்துவருகிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக இவர் நடித்த காக்கா முட்டை திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
தமிழ் சினிமாவை தாண்டி ஹிந்தி சினிமாவிலும் நடிக்க இவரை தேடி வாய்ப்புகள் வந்தன. தற்போது அடுத்ததடுத்த படங்களில் பிசியாக நடித்துவருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். இந்நிலையில் சாமி 2 படத்தில் நடித்த அனுபவம் குறித்து அதிர்ச்சி அளிக்கும் வகையில் பேசியுள்ளார்.
முதலில் நடிகை த்ரிஷாதான் இந்த கதாபாத்திரத்துக்கு ஒப்பந்தமானார், அதன்பின்னர் அவர் விலகி கொண்டார், பின்னர் என்னை நடிக்க சொன்னார்கள். ஆனால் எனக்கு விருப்பம் இல்லை, விக்ரம்-ஹரி என்னை பர்சனலாக கேட்டுக்கொண்டதால் ஒப்புக்கொண்டேன். வேறு எந்த நடிகையும் ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள் என அவர்கள் கூறியதும் ஒரு காரணம்" என கூறியுள்ளார்.