#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சொல்ல கூடாததை சொல்லி, சர்ச்சையில் சிக்கிய ஐஸ்வர்யா ராஜேஷ்! என்ன சொன்னார் தெரியுமா?
தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான சீமராஜா திரைப்படம் தோல்வியை தழுவியது. தற்போது அடுத்தடுத்த படங்களில் பிஸியான நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்நிலையில் தயாரிப்பாளராக புது அவதாரம் எடுத்துள்ள சிவா, இயக்குனர் காமராஜை வைத்து கனா படத்தை தயாரித்துள்ளார்.
படத்தில் சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், முக்கிய கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்நிலையில் படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, சில நாட்களுக்கு முன்பு படத்தின் வெற்றி விழா கொண்டாடப்பட்டது.
வெற்றிவிழாவில் பேசிய படத்தின் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் கூறுகையில், இந்த படத்தில் நடித்ததில் என் அம்மாவுக்கு பெரிய மகிழ்ச்சி. படத்தை பார்த்த பிறகு இந்த படத்துக்கு பிறகு நான் நடிக்காவிட்டாலும் கூட பரவாயில்லை என்று கூறியதைத்தான் நான் மிகப்பெரிய வெற்றியாக பார்க்கின்றேன்.
பல்வேறு திரைப்படங்கள் ஓடுதோ இல்லையோ, ஆனால் வெற்றிவிழா கொண்டாடுகிறார்கள் என ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது அதற்கு மன்னிப்பு கேட்டுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
நான் விளையாட்டாகத் தான் பேசினேன். யாரையும், எந்தப் படத்தையும் குறிப்பிட்டு பேசவில்லை. எப்போதும் நான் யாரையும் காயப்படுத்த விரும்பமாட்டேன். அனைத்து படங்களுமே வெற்றியடைய இறைவனை வேண்டுகிறேன். படம் எடுப்பதில் எவ்வளவு கடின உழைப்பு இருக்கிறது என்று எனக்குத் தெரியும். என்னுடைய பேச்சு யார் மனதையும் காயப்படுத்தி இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.
Hi guys. It’ was jus a fun. Speech for #KanaaSuccessMeet I din. Mean. Any movie. Here. an. Neve hurt anyone I always . Pray for all d movies to become blockbuster hit .. I know how hard it is to make a movie an make it huge. Success. Really sorry if my statement hurt. Any....
— aishwarya rajessh (@aishu_dil) January 8, 2019