மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
டீசர் மூலம் விஜயை சீண்டுகிறாரா ரஜினிகாந்த்.? காரணம் என்ன.?
காக்கா, கழுகு சர்ச்சையை தமிழ் சினிமா ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில், கழுகு உயரமாக பறக்கும், அதற்கு சரிசமமாக காக்கா பறக்க முயற்சித்து கொத்த வரும், அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் கழுகு மேலே பறக்கும் என்று பேசியிருந்தார்.
இந்த விவகாரம் ரசிகர்களிடையே பூதாகரமானது. அதாவது, அவர் காக்கா என்று தளபதி விஜயைத்தான் குறிப்பிட்டு பேசியிருக்கிறார் என பரபரப்பாக பேசப்பட்டது. அதன் பிறகு லியோ திரைப்பட வெற்றி விழாவில், தளபதி விஜய் அவர்களும் காக்கா கழுகு எனக் குறிப்பிட்டு பேசியது பரபரப்பை உண்டாக்கியது. ஆனாலும் கடைசியாக ஒரே தல, ஒரே உலக நாயகன், ஒரே சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் எனக்கு கொடுத்திருக்கும் தளபதி என்ற பட்டம் போதும் என தெரிவித்து, சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இந்த சூழலில் தான், தற்போது ரஜினி நடிப்பில் அடுத்தபடியாக வெளியாகவுள்ள வேட்டையன் என்ற திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியிருக்கிறது. அந்த டீசரில் குறி வச்சா இறை தப்பாது என்று ரஜினி பேசியிருக்கிறார் பின்னணியில் கழுகு பிஜிஎம் ஒலிக்கப்பட்டிருக்கிறது. இந்த விவகாரம் மறுபடியும் காக்கா, கழுகு சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. இதை வைத்து மறுபடியும் சமூக வலைதளத்தில் வாக்குவாதம் வெடிக்க தொடங்கியிருக்கிறது.