திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அவ்வளவும் வதந்தி, யாரும் நம்பாதீங்க..ஆடிப்போன பிக்பாஸ் ரித்விகா ஏன் தெரியுமா?
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரபரப்பான பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் தனது வெளிப்படையான குணத்தால் மக்கள் மனதில் நீங்க இடம்பிடித்தவர் ரித்விகா.
மேலும் இவரே பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில் நடிகை ரித்விகாவிற்கு பட வாய்ப்புகள் குவித்து வருவதாகவும், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது
அதுமட்டுமின்றி பிக்பாஸ் போட்டியில் கிடைத்த பரிசு பணம் ரூ.50 லட்சத்தை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நன்கொடையாக கொடுக்கவுள்ளதாகவும் சிலர் தகவல் வெளியிட்டிருந்தனர்.
There are lots of rumours going around about my new movie offers and me donating to various organisation.
— Riythvika✨ (@Riythvika) 4 October 2018
I will post details regarding my movie offers and other details in my Twitter account (@Riythvika).
Thanks a lot for your love and unconditional support
இந்நிலையில் இது குறித்து ரித்விகா தனது டுவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். “என்னை பற்றி நிறைய வதந்திகள் வந்து கொண்டிருக்கிறது. என்னுடைய புதிய படம் மற்றும் பரிசு பணம் நன்கொடை அளிப்பது பற்றி சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.
நான் என்ன செய்தாலும் அதை என் டுவிட்டர் கணக்கில் பதிவிடுவேன்” என ரித்விகா கூறியுள்ளார்.