மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நாய்க்கு சாப்பாடு போட்டது ஒரு குத்தம்மா! விஜய் டிவி பிரபலத்தை மிரட்டிய நபர்..!
இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் சிவகார்த்திகேயன், சந்தனம், ரோபோ சங்கர், ராமர் இப்படி எத்தனையோ பேர் விஜய் டிவி மூலம் பிரபலமானவர்கள்தான். அந்த வகையில் கலக்கப்போவது யார் என்ற நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஜாக்குலின்.
அதனை தொடர்ந்து வெள்ளித்திரையிலும் கால் பதித்து மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார். இந்நிலையில் தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து அனைத்து பிரபலங்களும் தங்களது வீடுகளிலேயே இருந்து வருகின்றனர்.
அதேபோல் வீட்டில் இருக்கும் ஜாக்குலின் தனது வீட்டின் முன்பு உள்ள கேட்டிற்கு பக்கத்தில் தெரு நாய்களுக்கு உணவு அளித்துள்ளார். அதனை அடுத்து ஜாக்குலின் வீட்டில் வளர்க்கப்படும் நாய் தெரு நாய்களை பார்த்து குறைத்துள்ளது. தெருநாய்களும் பதிலுக்கு குறைத்துள்ளன. இவ்வாறு மாறி மாறி நாய்கள் குறைத்ததால் எரிச்சல் அடைந்த பக்கத்து வீட்டுக்காரர் ஜாக்குலினை திட்டியுள்ளார்.
அதற்கு ஜாக்குலின் மன்னிப்பு கேட்டுள்ளார். இருப்பினும் கோபம் குறையாத அந்த நபர் ஜாக்குலினை பார்த்து நீ கிறிஸ்டியன் பெண் என்பதால் உன்னை சுமா விடுகிறேன். இல்லை என்றால் வீடு புகுந்து அடித்திருப்பேன் என்று கூறியுள்ளாராம். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜாக்குலின் மிகவும் வருத்தத்துடன் பதிவு செய்துள்ளார்.