மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கல்யாணம் எப்போ?? முதன்முதலாக தனது மாப்பிள்ளை குறித்து போட்டுடைத்த விஜய் டிவி ஜாக்குலின்!!
விஜய் தொலைக்காட்சியின் கலகலப்பான தொகுப்பாளரும், சின்னத்திரை நடிகையுமான ஜாக்குலின் தனது திருமணம் குறித்து ரசிகரின் கேள்விக்கு முதல்முதலாக மனம் திறந்து பதிலளித்துள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் பார்ப்போர் அனைவரையும் வயிறுகுலுங்க சிரிக்க வைக்கும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் சில சீசன்களை தொகுப்பாளர் ரக்சனுடன் இணைந்து தொகுத்து வழங்கியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஜாக்குலின். கரகரப்பான குரலை கொண்டிருந்தாலும், கலகலப்பான இவரது பேச்சு ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது.
அதனைத் தொடர்ந்து வெள்ளித்திரையில் கால்பதித்த அவர் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த கோலமாவு கோகிலா படத்தில் அவருக்கு தங்கையாக நடித்திருந்தார். அவரது நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது . பின்னர் சின்னத்திரை ஹீரோயினாக அவதாரம் எடுத்த அவர் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தேன்மொழி பிஏ என்ற சீரியலில் நடித்து வருகிறார்.
மேலும் சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் பிஸியாக இருக்கும் ஜாக்லின் சமீபத்தில் இன்ஸ்டாகிராம் லைவ்வில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்துள்ளார். அப்பொழுது ரசிகர் ஒருவர் உங்களுக்கு எப்போது திருமணம் என கேட்டதற்கு, அவர் மாப்பிள்ளை தேடிட்டு இருக்கேன். நல்ல அழகான மாப்பிள்ளை யாராவது இருந்தால் தயவு செய்து என்னை காண்டாக்ட் செய்யுங்கள் என்று கூறியுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.