அடேங்கப்பா.. இது வேற லெவல்தான்! சர்வதேச அளவில் ஜெய்பீம் படத்திற்கு கிடைத்த பெருமை! கொண்டாட்டத்தில் சூர்யா ரசிகர்கள்!!



jaibheem-movie-selected-for-golden-globe-award-list

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ஜெய்பீம். இந்த படத்தை கூட்டத்தில் ஒருத்தன் திரைப்படைத்தை இயக்கிய டிஜே ஞானவேல் இயக்கியுள்ளார். மேலும் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம்  தயாரித்துள்ளது. ஜெய்பீம் திரைப்படத்தில் லிஜோமோல் ஜோஸ், ரெஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.  

இதில் சூர்யா வழக்கறிஞராக நடித்துள்ளார். இப்படம் இருளர் இன மக்கள் வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ளது. உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. அதே சமயம் வன்னியர்கள் சமூகத்தினரை தவறாக சித்தரிப்பது போன்று இருப்பதாக சர்ச்சையும் எழுந்தது. சூர்யாவிற்கு எதிராகவும், இந்த படத்திற்கு விருது வழங்ககூடாது எனவும் எதிர்ப்புகள் எழுந்து வருகின்றது.

surya

இந்த நிலையில் தற்போது ஜெய்பீம் படம் அடுத்த ஆண்டு அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் சினிமா துறையின் புகழ்பெற்ற விருதாக கருதப்படும் ‘கோல்டன் குளோப்’ விருது விழாவில் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இப்படம் சிறந்த வெளிநாட்டு திரைப்படங்களுக்கான போட்டி பிரிவில் திரையிடப்படுகிறதாம். இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.