#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஜெயிலர் ஆடியோ லான்ச்... தமன்னாவின் சூப்பர் ஹாட் புகைப்படங்கள் இணைப்பு.!
இந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் தமன்னா. கேடி திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான தமன்னாவிற்கு கல்லூரி திரைப்படம் நல்ல பெயரை வாங்கித் தந்தது.
தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களான சூர்யா, விஜய் மற்றும் அஜித் போன்றவருடன் இணைந்து நடித்த இவர் சில காலம் முன்னணி நடிகையாக வலம் வந்தார். பின்னர் தமிழ் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துக் கொண்ட இவர் தற்போது சூப்பர் ஸ்டார் நடிப்பில் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளிவர இருக்கும் ஜெயிலர் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
ஏற்கனவே இந்த திரைப்படத்திலிருந்து வெளியான கவாலயா பாடலில் தனது ஆட்டத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் சேர் போட்டு அமர்ந்து விட்டார் என்றால் அது மிகையாகாது. ஜெயிலர் திரைப்படம் வெளியாவதை முன்னிட்டு அதன் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த தமன்னா சிகப்பு நிறத்தில் கவுன் போன்ற ஆடை அணிந்திருந்தார். இந்த புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார் தமன்னா. அந்தப் புகைப்படங்கள் தான் தற்போது இன்டர்நெட்டில் ட்ரெண்டிங்கில் இருக்கின்றன.