53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
ஜெயிலர் பட வில்லனை வைத்து ஜவுளி விளம்பரம்; மாற்றி யோசித்து பலரையும் வியக்கவைத்த யுக்தி.!
வியாபாரிகளின் விளம்பர யுக்தி என்றுமே பலரையும் வியக்க வைக்கும் வகையில் இருக்கும். எதையெடுத்தாலும் தள்ளுபடி, சலுகை விலை, விதவிதமான வகைகள் என ஒவ்வொரு பொருளுக்கு ஏற்ப விளம்பரம் வேறுபடும்.
துணி மற்றும் தங்கநகைக்கடைகள் எப்போதும் விளம்பர விஷயத்தில் சற்று வித்தியாசமாக யோசிக்கும் எண்ணம் கொண்டவர்கள். ஆனால், ட்ரெண்டுக்கேற்ப யோசனை செய்த நிறுவனத்தின் வீடியோ ஒன்றுதான் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி இருக்கிறது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார்கோவில் பகுதியில் செயல்பட்டு வரும் சொர்ணம் ஜவுளிக்கடை சார்பில் எடுக்கப்பட்ட விளம்பரம், ஜெயிலர் திரைப்படத்தின் வில்லன் கதாபாத்திரத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ பலதரப்பிடமும் வரவேற்பை பெற்றுள்ளது. அவர்களின் விளம்பர யுக்தியும் பாராட்டப்பட்டு வருகிறது.