திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
குடிபோதையில் ரகளை.! ஜெயிலர் பட வில்லன் திடீர் கைது.?
மலையாள சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் விநாயகன். இவர் வில்லனாகவும், குணசித்திர கதாபாத்திரத்திலும், கதாநாயகனாகவும் நடித்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை பெற்றிருக்கிறார்.
மேலும் தமிழ் சினிமாவில் முதன்முதலில் விஷால் நடிப்பில் வெளியான 'திமிரு' திரைப்படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் அறிமுகமானார். முதல் படமே மிகப்பெரும் வெற்றியடைந்து இவரின் நடிப்பை ரசிகர்கள் பாராட்டினர்.
இதையடுத்து தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடித்தாலும் அப்படங்கள் பெரிதும் பெயர் பெற்று தரவில்லை. இதையடுத்து சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'ஜெயிலர்' திரைப்படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார்.
இந்நிலையில், தொடர்ந்து பலவிதமான சர்ச்சைகளில் சிக்கி வரும் விநாயகன், தற்போது காவல் நிலையத்தில் குடித்து விட்டு அட்டகாசம் செய்ததாகவும், காவலரை தாக்கியதாகவும் கைது செய்யப்பட்டுள்ளார். இச்செய்தி இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.