குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
அந்த மாதிரி படத்தில், இந்த ஹீரோவோட மட்டும்தான் நடிப்பேன்!! ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ஜனனி ஐயர்!!
தமிழ் சினிமாவில் மாடலாக இருந்து பின் இயக்குனர் பாலாவின் அவன் இவன் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் சென்னையை சேர்ந்த ஜனனி ஐயர். அதனை தொடர்ந்து தெகிடி, அதே கண்கள், பாகன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். அதனை தொடர்ந்து மேலும் பல மலையாளப் படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் இரண்டில் பங்கேற்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.அதில் அவர் தனக்கு கிடைத்த வாய்ப்பை மிகவும் சரியாக பயன்படுத்திக்கொண்டு ரசிகர்களுக்கு பிடித்த போட்டியாளர்களில் ஒருவராக வலம் வந்தார். அதனை தொடர்ந்து அவர் தொல்லை காட்சி, கசட தபற மற்றும் அசோக் செல்வனுக்கு ஜோடியாக ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.
மேலும் நடிகை ஜனனி ஐயர் ஹோம்லியான கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வருகிறார், மேலும் தான் எப்பொழுதும் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடிக்க போவதில்லை எனவும் கூறி வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் ஜனனி ஐயர் பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதில் தற்போது டிரெண்டாகி வரும் அடல்டு காமெடி படங்களில் முன்னணி நடிகர்களோடு நடிக்கும் வாய்ப்பு உங்களுக்கு கிடைத்தால் நீங்கள் நடிப்பீர்களா? என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு ஜனனி ஐயர், அந்த திரைப்படம் அஜித் படமாக இருந்தால் கண்டிப்பாக நான் நடிப்பேன், மேலும் அது இரு நிமிட கதாபாத்திரமாக இருந்தாலும், தான் அதில் நடிக்க தயாராகவுள்ளேன். அதுமட்டுமின்றி அதற்கு எனக்கு சம்பளம் கூட தேவையில்லை என கூறியுள்ளார்.