திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
என்னது ஜவான் இத்தனை படங்களின் காப்பியா?.. படவெளியீடுக்கு முன்னரே சர்ச்சையில் சிக்கிய அட்லீ..!
வழக்கமாக திரைப்படம் வெளியான பின்பு பல சர்ச்சையில் சிக்கும் அட்லீ, தற்போது முன்னோட்ட காட்சியிலேயே கதாபாத்திர ஒப்பனை சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.
ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், பிரியா மணி, யோகிபாபு, சஞ்சய் தத், ரியாஸ் கான், சரண்யா மல்கோத்ரா, ரிதி டோக்ரா, பிரியதர்ஷினி உட்பட பலர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ஜவான்.
அட்லீ இயக்கத்தில், ரெட் சில்லிஸ் என்டேர்டைன்மெண்ட் தயாரிப்பில், அனிரூத் ரவிச்சந்தர் இசையில் உருவாகியுள்ள ஜவான் படம், உலகளவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது. படவெளியீடு பணிகளை யஷ்ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் மேற்கொள்கிறது.
இந்த நிலையில், படத்தின் முன்னோட்ட காட்சிகள் இன்று படக்குழுவால் வெளியிடப்பட்ட நிலையில், படத்திற்கு அப்டேட் கேட்ட ரசிகர்களுக்கு அது இன்ப அதிர்ச்சியாக இருந்தது.
படத்தின் முன்னோட்ட காட்சிகளின்படி ஆக்சன்-திரில்லர் படமாக ஜவான் தயாராகியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜவான் படத்தின் காட்சிகள் முந்தைய படங்களில் இடம்பெற்றுள்ளதை நெட்டிசன்கள் சுட்டிக்காண்பித்து இருக்கின்றனர்.
அதாவது, அந்நியன் - பாகுபலி - டார்க் நைட் திரைப்படத்தின் கதாபாத்திரங்களை ஒத்தவாறு காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காண்பிக்கும் நெட்டிசன்கள், ஷாருக்கானின் படத்தையும் பல படங்களில் இருந்த காட்சிகளை சுட்டு எடுத்தீர்களா? என கேள்வியும் எழுப்பி வருகின்றனர்.
முன்னதாக அட்லீ இயக்கத்தில் - விஜய் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் கதை திருட்டு விவகாரத்தில் சிக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. இவை குறித்து நேர்காணலில் அட்லீ பேசுகையில் எத்தனை ஆண்டுகள் இசைக்கு மெட்டு அமைத்தாலும் 8 சுரங்கள் தான், அதேபோல தான் திரைப்படங்களும் என பதில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.