திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
உலகளவில் ரூ.1100 கோடி வசூல் செய்து, மாபெரும் சாதனை படைத்தது ஜவான்.!
அட்லீ இயக்கத்தில், அனிரூத் இசையில், ரெட் சில்லிஸ் என்டர்டைன்மெண்ட் தயாரிப்பில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் ஜவான்.
ரூ.300 கோடி பொருட்செலவில் உருவாகிய திரைப்படம், தற்போது ரூ.1100 கோடி வசூல் செய்து மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது.
ஷாருக்கான், விஜய் சேதுபதி, நயன்தாரா, சன்யா மல்கோத்ரா, பிரியாமணி, யோகிபாபு, ரிதி தோக்ரா, சஞ்சய் தத், ரியாஸ் கான் உட்பட பலரும் படத்தில் நடித்திருந்தனர்.
கடந்த செப். 07ம் தேதி வெளியான திரைப்படம், சர்வதேச அளவில் ரூ.1090.89 கோடி வசூல் செய்துள்ளது. இன்று அல்லது நாளை ரூ.1100 கோடி இலக்கை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு உட்பட பல மொழிகளில் வெளியானது.