திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஜெயம் ரவி ஸ்பெஷல்.. புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு.!
நடிகர் ஜெயம் ரவியின் பிறந்தநாளையொட்டி புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் ஜெயம் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ரவி. அதன் பின்னர் இவர் நடித்த திரைப்படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானதால் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உருவெடுத்துள்ளார்.
இவர் நடித்துள்ள இறைவன் திரைப்படம் வரும் செப்டம்பர் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும் அறிமுக இயக்குனர் புவனேஷ் அர்ஜுனன் இயக்கத்தில் ஜீனி என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் ஜெயம் ரவியின் பிறந்தநாளையொட்டி சைரன் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. க்ரைம் த்ரில்லராக உருவாகும் இந்த படத்தை அந்தோணி பாக்கியராஜ் இயக்குகிறார்.
Happy Birthday my dearest @actor_jayamravi sir ❤️💐
— Antony Bhagyaraj (@antonybhagyaraj) September 9, 2023
Our Siren #Preface for you and your fans 🙏🏼#HappyBirthdayJayamRavi #SirenPreFace pic.twitter.com/lUdJqupYNK
இந்தப் படத்தை ஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.