திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ட்ரெய்லரில் மிரட்டிய இறைவன்... மீண்டும் ஒரு திரில்லரை சந்திக்க தயாராகிறதா தமிழ் திரை உலகம்.?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி. இந்த வருடம் இவரது இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து இவர் தற்போது இறைவன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் .
தனி ஒருவன் திரைப்படத்திற்குப் பிறகு இந்த திரைப்படத்தில் நயன்தாரா ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இந்த திரைப்படத்தை மனிதன் மற்றும் என்றென்றும் புன்னகை போன்ற திரைப்படங்களை இயக்கிய அகமது இயக்கியிருக்கிறார்.
இந்தத் திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 28ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதனை முன்னிட்டு இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் படக்குழுவினரால் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது.
One … Two … Three !!! #IraivanTrailer: https://t.co/Tmar7X2myw
— Jayam Ravi (@actor_jayamravi) September 3, 2023
Experience #Iraivan in theatres from September 28th worldwide 💥@Ahmed_filmmaker @thisisysr #Nayanathara @PassionStudios_@eforeditor @jacki_art @Dophari @Synccinema @MangoPostIndia @gopiprasannaa… pic.twitter.com/uqyq8120IV
தனது மற்ற திரைப்படங்களில் இருந்து மாறுபட்டு சைக்கோ கதை களத்தை தேர்வு செய்து இருக்கிறார் இயக்குனர் அகமத். இந்தத் திரைப்படத்தின் ட்ரைலரை பார்க்கும்போது இது ஒரு சைக்கோ திரில்லர் அல்லது சீரியல் கில்லர் கதைக்களமாக இருக்கும் என நம்மால் யூகிக்க முடிகிறது. மேலும் இந்த ட்ரெய்லரானது திரைப்படத்தினை பற்றிய எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் அதிகரித்திருக்கிறது.