#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இமான் அண்ணாச்சிக்கு இப்படியொரு சோதனையா? துடிதுடித்து கண்கலங்கியதால் வருத்தத்தில் ரசிகர்கள்!!
தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராகவும்,நகைச்சுவை நடிகராகவும் இருப்பவர் இமான் அண்ணாச்சி. இவர் பிரபல தொலைக்காட்சியில் சொல்லுங்கண்ணே சொல்லுங்க, குட்டிஸ் சுட்டிஸ் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.
மேலும் அவர் சென்னை காதல், வேட்டைக்காரன், மரியான், நையாண்டி, ஜில்லா, கயல், கோலி சோடா, பூஜை,கதகளி, சிங்கம் 3, சாமி 2, நிமிர், காக்கி சட்டை, புலி போன்ற திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராகவும் நடித்திருந்தார்.
இமான் அண்ணாச்சிஅரும்பாக்கம் ராஜீவ்காந்தி தெருவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அவரது மனைவி மற்றும் மகள் கோடை விடுமுறைக்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்களது சொந்த ஊருக்கு சென்று விட்டனர். வீட்டில் அவரது தம்பி மற்றும் குடும்பத்தினர் இருந்துள்ளனர்.
இந்நிலையில் படப்பிடிப்பு முடிந்து இமான் அண்ணாச்சி வீட்டுக்கு வந்த போது பீரோவில் இருந்த 45 பவுன் நகை கொள்ளை போய் இருப்பது தெரிந்தது. பீரோவின் பூட்டு உடைக்கப்படவில்லை. கள்ளச்சாவடி போட்டு நகையை மர்ம நபர் திருடியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த இமான் அண்ணாச்சி இது குறித்து அரும்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விரைந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.