மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"எழுதப்பட்டது எழுதப்படும்" - மாஸ் ஆக்சன் காட்சிகளுடன் வெளியானது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ட்ரைலர்.!
ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே சூர்யா, இளவரசு, நிமிஷா சஜயன், அரவிந்த் ஆகாஷ் உட்பட பலர் நடித்து உருவாகியுள்ள திரைப்படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ஜிகர்தண்டா திரைப்படத்தை தொடர்ந்து, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் உருவாகியுள்ளது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
கார்த்திகேயன் சந்தானம், எஸ்.கதிரேசன், அலங்கார பாண்டியன், கதிரேசன் ஆகியோர் படத்தை தயாரித்து வழங்கியுள்ளனர். படம் நவ. 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்நிலையில், படத்தின் டிரைலர் இன்று படக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளது. வில்லன் கதாபாத்திரத்தில் மாஸாக நடித்துள்ள நடிகர் ராகவா, தனது நடிப்பில் மிரட்டியெடுத்துள்ளார்.