திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது? படக்குழு அறிவிப்பு.!
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ் ஜே சூர்யா நடிப்பில் கடந்த தீபாவளிக்கு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.
இந்த படத்துடன் வெளியான கார்த்தியின் ஜப்பான் திரைப்படம் கடும் தோல்வியை சந்தித்த நிலையில், திரையரங்குகளில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் ஹைவுஸ்புல் காட்சிகளாக நிரம்பியது.
இந்த நிலையில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் வரும் டிசம்பர் 8ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.