மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வு செய்யப்பட்ட ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்.!
அண்மையில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யா, ராகவா லாரன்ஸ் ஆகியோர் இணைந்து நடித்த வெளியான திரைப்படம் தான் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்.
திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் நடப்ப ஆண்டு நடைபெறவுள்ள 53-வது ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் லைன் லைட் என்ற பிரிவில் இந்த திரைப்படத்தை திரையிட தேர்வு செய்திருப்பதாக படக்குழுவினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஏற்கனவே இந்த திரைப்பட விழாவில் இயக்குனர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி, அஞ்சலி, சூரி முக்கிய வேடத்தில் நடித்து தயாராகி வரும் ஏழு கடல், ஏழுமலை திரைப்படம் திரையிடப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் ஜனவரி மாதம் 25-ஆம் தேதி முதல் பிப்ரவரி மாதம் 4-ம் தேதி வரையில் இந்த திரைப்பட விழா நடைபெறுகிறது.