மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தயாரிப்பாளரை "நாய்" என திட்டி அசிங்கப்படுத்திய அஜித்.. அஜித் இப்படி செய்தாரா என ஷாக்கான ரசிகர்கள்.!
கோலிவுட் திரையுலகில் பிரபல நடிகரான அஜித் பல திரைப்படங்களில் நடித்து வெற்றி பெற்று அல்டிமேட் ஸ்டார் அஜித் எனவும், தல எனவும் ரசிகர்களால் அன்பாக அழைக்கப்படுகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 'துணிவு' திரைப்படம் வசூல்ரீதியாகவும், விமர்சனரீதியாகவும் வெற்றி நடைபோட்டது.
இதன் பிறகு அஜித் 62 திரைப்படத்தின் அப்டேட் வெளிவராத நிலையில் அஜித்தின் பிறந்த நாளான இன்று அதிகாரப்பூர்வமாக அஜித் 62 படத்திற்கு 'விடாமுயற்சி' என்ற பெயருடன் கூடிய போஸ்டர் இன்று வெளியானது. இச்செய்தி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது. மேலும் இந்த டைட்டில் போஸ்டர் பல விமர்சனங்களை பெற்றாலும் அஜித் ரசிகர்களால் வரவேற்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற நிலையில், அஜித் தயாரிப்பாளர் ஒருவரை 'கண்ட நாய் எல்லாம் எனக்கு அட்வைஸ் பண்ண வேண்டாம்' என்று திட்டினார் என்று பிரபல பத்திரிக்கையாளர் அந்தணன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இந்த வீடியோ அஜித் பிறந்த நாளான இன்று வைரலாக பரவி வருகிறது.
மேலும், அந்த வீடியோவில் பத்திரிக்கையாளர் அந்தணன் கூறியதாவது, "அஜித் வாழ்க்கையில் பல ஏற்ற இறக்கங்களை பார்த்தவர் என்று அனைவருக்கும் தெரிந்த விஷயம். அவ்வாறு அஜித்தின் செயல்களால் சில காலம் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த நேரத்தில் தயாரிப்பாளர் கோதண்டராமையா அஜித்திற்கு அட்வைஸ் செய்தார். அதற்கு பேட்டி ஒன்றில் பதிலளித்த அஜித் அவரை "கண்ட நாய் எல்லாம் எனக்கு அட்வைஸ் செய்ய வேண்டாம்" என்று காட்டமாக பேசியிருக்கிறார். இந்த வீடியோ தற்போது வேகமாக பரவி வருகிறது.