திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
"தமிழில் தன் பெயரைக் கூட ஒழுங்காக எழுதத் தெரியாத ஜோவிகா!" வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோ பிக் பாஸ். இது ஆறு சீசன்களை வெற்றிகரமாக கடந்து தற்போது ஏழாவது சீசன் ஒளிபரப்பாக உள்ளது. அக்டோபர் 1ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த சீசனில் போட்டியாளர்களாக மொத்தம் 23 பேர் கலந்துகொண்டனர்.
வார நாட்களில் இரவு 9.30 மணி முதல் 10.30 மணி வரை இந்நிகழிச்சி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 9.30 மணி முதல் 11 மணி வரை ஒளிபரப்பாகும். கமலஹாசன் தொடர்ந்து தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியின் முக்கிய விதியே அனைவரும் தமிழில் பேசவேண்டும் என்பது தான்.
பல மொழிப் பிரபலங்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றாலும், யாராவது ஆங்கிலத்தில் பேசினால் முந்தைய சீசனில் கமலஹாசனே தமிழில் பேசுமாறு கண்டித்துள்ளார். இதையடுத்து இந்த சீசனில் வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா கலந்துகொண்டுள்ளார்.
வயதில் மிகவும் சிறியவரான ஜோவிகா, தான் படிப்பை பாதியில் நிறுத்தியதாக கூறியிருந்தார். இது பெரும் சர்ச்சையான நிலையில், தற்போது ஜோவிகா தனது பெயரை ஜேபவிகா என்றும், விஜய் என்ற பெயரை விஜ்ய் என்றும் எழுதும் வீடியோ இணையத்தில் வலம்வருகிறது.