திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
"ஏர்போர்ட்டில் இருந்து வெளியே வந்து இயக்குனரை சந்தித்து ஆசி பெற்ற ஜோவிகா!" எந்த இயக்குனர் தெரியுமா.?
நடிகர் விஜயகுமாரின் மகள்வழிப் பேத்தியும், நடிகை வனிதாவின் மகளுமான ஜோவிகா, வனிதாவின் முதல் கணவர் ஆகாஷுக்கும் வனிதாவுக்கும் 2003ம் ஆண்டு பிறந்தவர். தற்போது பார்த்திபனிடம் இணை இயக்குநராகப் பணியாற்றி வரும் ஜோவிகா, 2 தெலுங்குப் படங்களிலும் நடிக்க உள்ளதாகத் தெரிகிறது.
இந்நிலையில் விஜய் டீவியில் ஒளிபரப்பாகும் 'பிக் பாஸ் சீசன் 7' நிகழ்ச்சியில் முன்னாள் போட்டியாளர் வனிதா விஜயகுமாரின் மகள் என்ற அடிப்படையில் ஜோவிகா கலந்துகொண்டார். இந்த சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்களிலேயே மிகவும் குறைந்த வயதைக் கொண்டவராக ஜோவிகா இருந்தார்.
நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே தனது மெச்சூர்டான செயல்களினால் அனைவர் கவனத்தையும் கவர்ந்த ஜோவிகா, பைனல் வரை செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து யாரும் எதிர்பாராத வகையில் வெளியேறினார்.
இந்நிலையில், பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு, ஏர்போர்ட்டில் இருந்து பார்த்திபனும், அவரது மகளும் வெளியே வரும்போது ஜோவிகா பார்த்திபனை சந்தித்து ஆசி பெற்றுள்ளார். இந்த வீடியோவை வனிதா விஜயகுமார் தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.