திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பிக்பாஸ் ஜோவிகாவை நேரில் சந்தித்து சர்ப்ரைஸ் கொடுத்த பிரபலம்.! அட.. யாருன்னு பார்த்தீங்களா!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ்.இதன் ஏழாவது சீசன் கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதி தொடங்கி விறுவிறுப்பாகவும் அனல் பறக்க சென்று கொண்டுள்ளது. இந்த சீசனில் போட்டியாளர்களுள் ஒருவராக கலந்து கொண்டவர் வனிதாவின் மகள் ஜோவிகா.
அதிரடியாக தனது டாஸ்க்குகளை செய்து சிறப்பாக விளையாடி வந்த ஜோவிகா நிகழ்ச்சியின் இறுதிவரை செல்வார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அவர் குறைந்த வாக்குகளைப் பெற்று நிகழ்ச்சியிலிருந்து எலிமினேட் ஆனார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய அவர் தனது வேலையில் தீவிரம் காட்டி வருகிறார்.
இந்நிலையில் ஜோவிகாவை சக பிக்பாஸ் போட்டியாளரான ஆர்.ஜே பிராவோ நேரில் சென்று சந்தித்து சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த வனிதா விஜயகுமார், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு உண்மையான நண்பர்கள் உண்மையான உலகத்தில் சந்தித்துக் கொண்டனர். பிராவோ ஜோவிகாவை அவரது வேலை செய்யும் இடத்திற்கு சென்று சந்தித்து சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் என தெரிவித்துள்ளார். அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.