திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
காதலருடன் சேர்ந்து ஜூலி காவலரை தாக்கினாரா? வேதனையுடன் அவரே கூறிய பதிலால் ரசிகர்கள் ஷாக்!!
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலமாக பிரபலமானவர் ஜூலி. அதன்பிறகு, தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களிடம் ஏகப்பட்ட விமர்சனங்களுக்கு ஆளானார் .
ஆனால் அதனை பொருட்படுத்தாத ஜூலி அதனை தொடர்ந்து தொகுப்பாளினியாக களமிறங்கினார். பின்னர், சினிமாவிலும் நடிக்க தொடங்கினார்.மேலும் சினிமாவில் நன்கு வளர்ச்சியடைய வேண்டும் என்று ஆவலுடன் வந்த இவர் சில படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் நேற்று, வேப்பேரி பகுதியில் நின்றுகொண்டிருந்த போலீஸ் ஜீப் மீது ஜூலியின் காதலன் கார் மோதியது. இது குறித்து அவர் தட்டி கேட்டபோது, தலைமைக் காவலர் பூபதி என்பவரை, ஜூலியின் காதலர் இப்ரான் தாக்கியுள்ளார். மேலும் அவருக்கு ஆதரவாக 10 பேர் கொண்ட கும்பல் ஒன்றும் போலீசை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து காவலர் பூபதி, வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதனை தொடர்ந்து போலீசார் ஜோலியின் காதலர் உட்ப அனைவரின் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் இதுகுறித்து பிரபல ஊடகம் ஒன்றிற்கு இந்த சம்பவம் குறித்து ஜூலி பேட்டி அளிக்கையில், அந்த பிரச்சினை நடந்த இடத்தில் நான் இல்லவே இல்லை. எனக்கு பல நண்பர்கள் இருக்கிறார்கள் அவர்கள் செய்த தவறுக்கு நான் எப்படி பொறுப்பு ஏற்க முடியும் . உண்மை தெரியாம பலரும் மிக மோசமாக என்னை விமர்சனம் செய்கிறார்கள். எனக்கு வேதனையாக உள்ளது என ஜூலி கூறியுள்ளார்.