மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
முகத்தில் பலத்த ரத்தக் காயத்துடன், பார்ப்போரை நடுங்கவைக்கும் கெட்டப்பில் பிக்பாஸ் ஜுலி! வைரலாகும் ஷாக் வீடியோ!
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துக் கொண்டு குரல் கொடுத்ததன் மூலம் மக்கள் மத்தியில் வீரதமிழச்சி என பிரபலமானவர் ஜூலி. அதனைத் தொடர்ந்து அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் இவர் மேலும் பிரபலமானார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் துவக்கத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால் காலப்போக்கில் பிக்பாஸ் வீட்டில் இவர் செய்த சில காரியங்களால் ரசிகர்களால் பெருமளவில் வெறுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய அவர் தொகுப்பாளினி, விளம்பரப் படங்கள், சில திரைப்படங்கள் என பிஸியானார்.
ஆனாலும் அவர் என்ன செய்தாலும் ரசிகர்கள் தொடர்ந்து கலாய்த்து வந்தனர். அதனை சிறிதும் பொருட்படுத்தாத ஜுலி தொடர்ந்து பல வித்தியாசமான போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் தற்போது நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வரும் நிலையில் அதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முகத்தில் ரத்த காயத்துடன் பார்ப்போரை நடுங்க வைக்கும் வகையில் வித்தியாசமான கெட்டப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.