மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"பெரிய பட இயக்குனர்கள் என்னை அவமரியாதை செய்தனர்" கோபத்தில் பேட்டியளித்த ஜோதிகா..
1999ம் ஆண்டு எஸ்.ஜே.சூர்யா இயக்கிய "வாலி" படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் நடித்து அறிமுகமானார் ஜோதிகா. இதையடுத்து பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து ஸ்நேகிதியே, முகவரி, உயிரிலே கலந்தது, ரிதம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
தெடர்ந்து பல முன்னணி ஹீரோக்களுடனும் நடித்து முன்னணி கதாநாயகியாக இருந்த ஜோதிகா, 2006ம் ஆண்டு நடிகர் சூர்யாவை திருமணம் செய்துகொண்டார். தற்போது இவர்களுக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். நீண்ட காலத்திற்குப் பிறகு தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார் ஜோதிகா.
அதன்படி பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களான செக்கச் சிவந்த வானம், ராட்சசி, மகளிர் மட்டும் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் ஒரு பேட்டியில், "நான் கிட்டத்தட்ட 25 வருடங்களாக சினிமாவில் உள்ளேன். நான் இங்கு ஒரு விஷயத்தை சொல்லியே ஆகவேண்டும்.
என்னை சில பெரிய படங்களில் நடிக்க கேட்டார்கள். ஆனால் என்னுடைய கதாப்பாத்திரம் 2 சீனில் மட்டும் வருவதாக இருந்தது. பெரிதாக முக்கியத்துவம் இல்லை. இரண்டு சீனாக இருந்தாலும் நன்றாக இருந்தால் நான் நடிப்பேன். ஆனால் இது என்னை அவமதிப்பதற்கு சமம்" என்று மனம் வருந்தி ஜோதிகா கூறியுள்ளார்.