திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
"எனக்கு சிம்பு தான் ரொம்ப பிடிக்கும், அவருடன் இப்போதும் தொடர்பில் இருக்கிறேன்" ஜோதிகா ஓபன் டாக்!
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கோலிவுட்டின் முன்னணி நாயகனாக இருப்பவர் சிம்பு. லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் இவர் 2006ம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருதினை வென்றுள்ளார். 2005ம் ஆண்டு இவரது தந்தை இயக்கிய "காதல் அழிவதில்லை" படத்தில் ஹீரோவாக களமிறங்கினார்.
தற்போது ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் "எஸ் டி ஆர் 48" படத்தின் படப்பிடிப்புக்கு தயாராகிக் கொண்டிருக்கும் சிம்பு குறித்து மன்மதன் படத்தில் அவருடன் நடித்த ஜோதிகா சில விஷயங்களை மனம் திறந்து கூறியுள்ளார். அவர் கூறியதாவது, "சிம்பு என்னை விட சின்ன பையன் தான்.
நான் நடித்ததிலேயே மிகவும் இளம் ஹீரோ என்றால் அது சிம்பு தான். அவர் ரொம்பவே வெளிப்படையான ஆள். அதனாலேயே எனக்கு அவரை மிகவும் பிடிக்கும். இப்போது வரை நான் சிம்புவுடன் தொடர்பில் தான் இருக்கிறேன்" என்றும் கூறியுள்ளார் ஜோதிகா.
மேலும் அவர், "சில்லுனு ஒரு காதல்" படத்தை பார்த்துவிட்டு சிம்பு மனம் திறந்து பாராட்டியதாகவும், அதன் பின்னர் செக்க சிவந்த வானம் படத்தில் ஜோடியாக இல்லையென்றாலும் ஒரு சில காட்சிகளில் அவருடன் நடித்தது மறக்க முடியாது என்றும் ஜோதிகா நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்