மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தருகிறார் சூர்யா!" ஜோதிகா ஓப்பன் டாக்!
எஸ்.ஜே. சூர்யா இயக்கிய "வாலி" படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் அறிமுகமானவர் ஜோதிகா. அதன் பின்னர் குஷி, மொழி, சந்திரமுகி, காக்க காக்க, பூவெல்லாம் உன் வாசம் என அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார்.
இதையடுத்து நடிகர் சூர்யாவைக் காதலித்து திருமணம் செய்துகொண்ட ஜோதிகா, தற்போது இரண்டு குழந்தைகளுக்கு தாயாக உள்ளார். திருமணத்திற்குப் பிறகு சினிமாவை விட்டு விலகியிருந்த ஜோதிகா, தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார்.
இதையடுத்து பெண்ணை மையமாக வைத்து எடுக்கப்பட்ட "36 வயதினிலே" படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். இப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. தற்போது மலையாளத்தில் என்ட்ரி கொடுத்துள்ள ஜோதிகா, சமீபத்தில் ஒரு பேட்டியளித்திருந்தார்.
அதில் அவர், "ஹீரோவுக்கு நாயகி என்ற விஷயம் மட்டுமே எனக்கு போதாது. என்னுடைய கேரக்டருக்கு முக்கியத்துவம் இருக்கவேண்டும். அதேபோல் எனது கணவர் சூர்யாவின் படங்களில் நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது" என்றும் கூறியுள்ளார்.