மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காதல் படத்தில் மெக்கானிக் பையனாக வந்த சிறுவன் தற்போது எப்படி உள்ளார் தெரியுமா.? வைரல் புகைப்படம் இதோ.!
இயக்குனர் பாலஜி சக்திவேல் இயக்கத்தில், பரத், சந்தியா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் காதல். 2004 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் அந்த படத்தில் நடித்த பலரையும் தமிழ் திரையுலகில் பிரபலமாக்கியது. படத்தில் வில்லனாக நடித்த தண்டபாணி இந்த படத்திற்கு பிறகு காதல் தண்டபாணி என அழைக்கப்பட்டார்.
படத்தின் நாயகி சந்தியா தமிழ் திரையுலகில் நல்ல வரவேற்பை பெற்று அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமானார். நடிகர் பரத்துக்கும் இந்த திரைப்படம் மிக பெரிய திருப்புமுனை என்றே கூறலாம். இப்படி, இந்த படத்தில் நடித்த அனைவரும் தமிழ் சினிமாவில் பிரபலமானார்கள்.
ஆனால், இந்த படத்தில் நடிகர் பரத்துடன் இணைந்து மெக்கானிக் கடையில் வேலை பார்க்கும் சிறுவனாக ஒருவர் நடித்திருப்பார். அந்த சிறுவனின் கதாபாத்திரமும் ரசிகர்களால் ரசிக்கப்பட்ட நிலையில் இந்த படத்திற்கு பிறகு இவர் என்ன ஆனார் என்றே தெரியமால் இருந்தது.
இந்நிலையில் இவரது சமீபத்திய புகைப்படம் ஓன்று இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது. சிறுவனாக இருந்த அந்த பையன் தற்போது நன்கு வளர்ந்து அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியுள்ளார். இதோ அவரது புகைப்படம்.